அதிக சத்துள்ள, விலை மலிவான சப்போட்டா பழம்
சப்போட்டாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி இருமல் தொற்றிலிருந்தும், சருமத்தை பாதுகாப்பதுடன், வயதான தோற்றத்தையும் தடுக்கின்றது."சிக்கூ" என்றும் அழைக்கப்படும், ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதில் பல வைட்டமின்கள் இருக்கின்றதுஇதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி தேய்மானம் வராமல் பாதுகாக்கின்றது.இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தினை சீராக்கி, இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட சப்போட்டா பழம் மலச்சிக்கலை தடுக்க உதவுகின்றது.சப்போட்டா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பார்வை குறைபாடுகளை தடுக்கவும் செய்கின்றது.இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தவும் செய்கின்றது.சப்போட்டா ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும் செய்கின்றது.
0
Leave a Reply