இறைவனடி சேர்ந்தார் ஸ்ரீமதி P.B.ராஜேஸ்வரி அவர்கள்
எனது அன்புத் தாயாரும் , மறைந்த திரு. P. C.பலராமராஜா ( Founder - Janathacem ) அவர்களின் துணைவியுமான, திருமதி. ராஜேஸ்வரி பலராமராஜா அவர்கள் (19.12.2022) அன்று தனது 89-வது வயதில் இறைவனடி சேர்ந்தார், என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தன்னையும், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் தன்னுடைய ஹாஸ்யத்தால் சிரிக்க வைப்பார். நல்ல சுவையாக உணவை சமைப்பதில் வல்லவர். அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்பவர். சிக்கனமாக இருக்க வலியுறுத்துவார். ஆனால் கஞ்சத்தனம் கூடாது, என்று அறிவுரை வழங்குவார். தன் கடைசி காலம் வரை யாருக்கும் பாரமாக இல்லாமல், தன் பலத்திலேயே நின்று ஜெயித்தவர். தவறு என்று தெரிந்தால், அடுத்த கனமே எடுத்துக் கூறி சரி செய்வார். அவர்களின் மறைவு வருத்தத்தை அளித்தாலும், அவருடைய போதனைகள் அனைத்தும் மன நிறைவை கொடுத்துள்ளது. அவர்களுடைய ஆன்மா அமைதி பெற என் சார்பிலும், இராஜபாளையம் டைம்ஸ் சார்பிலும் இறைவனிடம் வேண்டி வணங்குகிறேன்.
அன்னாரது அண்டுதீரடம் 28.12.2022 புதன்கிழமை 90. A3 P.S.K, நகரில் உள்ள இல்லத்தில் வைத்து நடைபெறும்.
திருமதி குணா பாஸ்கர் ராஜா
0
Leave a Reply