சோயா 65
தேவையான பொருட்கள் சோயா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், சீரகப் பொடி அரை டீஸ்பூன், கரம் மசாலா 1 டீஸ்பூன், வத்தல் பொடி 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழம் சாறு அரை மூடி, தேவையாள அளவு உப்பு, தண்ணீர் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 10 கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை தண்ணீர் கொதிக்க வைத்து அத்துடன் உப்பு சேர்த்து சோயாவை போட்டு அடுப்பை அனைத்து 10 to 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நன்றாக வடித்து பிழிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சோயா, எல்லா பொடிகளையும் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
பின் எண்ணெயை காய வைத்து சோயாவை பொறித்து எடுக்கவும். சோயா மொறு மொறுவென்று பொரிந்ததும் எடுத்து வைக்கவும். எண்ணெயில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை லேசாக வறுத்து இத்துடன் சேர்த்து கிளறி வைக்கவும். சோயா 65 ரெடி.
0
Leave a Reply