புற்று நோய் வராமல் தடுக்கும் இனிப்பான கரும்புசாறு
கரும்பு சாறில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந் துள்ளது. கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்
கரும்பில் அதிக அளவு நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், தையாமின், ரிபோபிளவின், புரோட்டீன், இரும் புச்சத்து போன்ற பலவித சத்துக் கள் நிறைந்துள்ளது.
கரும்பு சாறு பருகினால் உடனடி ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது.
கரும்பு ஜூஸில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை பருகும்போது அவை நேரடியாக கிடைக்கப்பெற்று வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக செய்யும்.
கரும்பு சாறில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ள தால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் மற்றும் பிளவோனாய்டுகள் நிறைந்துள்ளது. இவை புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். புற்று நோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.
கரும்பு சாறில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடி யம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்’ தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறு நீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோ லைட்டுகள் நிறைந்துள்ளது. இவை உங்களின் கல்லீரலின் ஆரோக்கியத் தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம் படுத்த விரும்புவோர் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாற்றினை பருகுங்கள்.
கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும - ஆரோக்கியத்தினை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும், எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்பொழுது உங்களின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.
0
Leave a Reply