25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பயிற்சி பெற விண்ணப்பிக்க 16.09.2023 அன்று வரை கால நீட்டிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பயிற்சி பெற விண்ணப்பிக்க 16.09.2023 அன்று வரை கால நீட்டிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைசார்ந்தவர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒருபட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்சார்ந்த மாணாக்கர்களுக்கு TCS iON  நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான Data Analytics and Reporting, Applied Cloud Computing, Practical Approach to cyber security, Machine Learning for Real World Application, Intelligent Game Design and its Applications  மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Graphic Designing (Professional), Motion Graphics போன்ற பயிற்சிகளை இணைய தளம் வழியாக பயிற்றுவித்து முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவழிவகை செய்யப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற B.E/ B.Tech /BCA /B.Sc (CS&IT) MCA/ M.Sc (CS&IT) அல்லது ஏதேனும் ஒருபட்டப்படிப்பு முடித்த மாணாக்கர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன் (Animation)  சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் TCS iON  நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் NQT (National Qualifier Test)  தேர்ச்சிபெற வேண்டும். இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS iON  நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுமையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும். இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்சத்தில் TCS iON நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒருபாடப் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
இப்பயிற்சிக்கான விண்ணப்ப கடைசி தேதி 31.08.2023 என்பதை 16.09.2023 என்று தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News