வெறும் பூட்டில் துவங்கிய கோத்ரேஜ் சாம்ராஜ்ஜியம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வலிமையுடன் நிற்கிறது.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டு பிரோ, அலமாரிகளிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெயர் உலகளவிலும் பரவியுள்ளது 1921 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இங்கிலாந்து ராணி வந்திருந்தபோது கோத்ரெஜ் தயாரிப்பைப் பயன்படுத்தினார்.1897 மே 7 ஆம் தேதியன்று கோத்ரெஜ் நிறுவனத்தை ஆர்தேஷிர் கோத்ரெஜ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1868 ஆம் ஆண்டு பம்பாயில் கோத்ரெஜ் பிறந்தார். அவர் ஆறு குழந்தைகளில் மூத்தவர். அர்தேஷிர் மூன்று வயதாக இருந்தபோது, அவரது தந்தை புர்ஜோர்ஜி கூத்தராஜி, குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றினார், அதனால் தான் 'கோத்ரேஜ்' என்ற பெயர் வந்தது. சட்டப் பள்ளியில் புதியவரான அர்தேஷிர் 1894 இல் பம்பாய் சொலிசிட்டர்ஸ் நிறுவனத்தால் சான்சிபார் சென்று தங்கள் வாடிக்கையாளருக்காக ஒரு வழக்கை வாதாட நேர்ந்தது. இந்த வழக்கில் தான் பொய் சொல்ல வேண்டும் அல்லது உண்மையை திரித்து வாதாட வேண்டும் என்பதை அர்தேஷிர் உணர்ந்தார்.அவர் இதைச் செய்ய மறுத்துவிட்டார். வழக்கறிஞர்கள் அல்லது வாடிக்கையாளரின் எந்த வற்புறுத்தலும் தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்ற அவரை நம்ப வைக்க முடியாது என்று இருந்தார். இதனால் வழக்கறிஞர் வேலையை விட்டார்.
ஆர்தேஷிர் கோத்ரெஜ் இந்தியாவுக்கு வந்த பிறகு ஒரு கெமிக்கல் கடையில் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். அதன் விளைவாக அறுவை சிகிச்சை உபகரணங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். இது வேலை செய்யாவிட்டாலும் வெற்றிபெற அவர் உந்துதல் பெற்றார். பின்னர், மெர்வாஞ்சி காமா என்ற பார்சி தொழிலதிபர் அவருக்கு ஒரு புதிய பூட்டு தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க கடன் கொடுத்தார். ஆர்தேஷிர் கோத்ரேஜ் இந்தியாவுக்குச் சென்ற பிறகு 1894 இல் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு சிறிய ஷெட்டில் இந்த மனிதர் தயாரித்த பூட்டுகள் பிரிட்டிஷ் காலனி காலத்தின்போது இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூட்டுகளை விட சிறப்பாக இருந்தது என்பதாலேயே மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்தின் புகழ் காட்டுத்தீ போல பரவியது.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பூட்டுகளில் உள்ள மென்மையான ஸ்பிரிங்குகள் எல்லாம் பழுதாகி இவர் தயாரித்த பூட்டுகள் வலுவாக இருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூட்டுகளை விட கோத்ரெஜ் தயாரித்த பூட்டுகள் விலை மலிவாக இருந்தன. இவரது விலை குறைந்த பூட்டுகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்ததால் கோத்ரெஜ் நிறுவனம் விரைவிலேயே மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றது. ஆர்தேஷிர் கோத்ரெஜ், பச்சுபாயை 1890ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
அர்தேஷிர் கோத்ரேஜ் மற்றும் பிரோஜ்ஷா புர்ஜோர்ஜி கோத்ரேஜ் ஆகியோர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1897 ஆம் ஆண்டு வணிகத்தை நிறுவினர். இன்று, சுமார் 1.1 பில்லியன் நபர்கள் கோத்ரெஜின் செயல்பாடுகளில் பல்வேறு தொழில்களில் பணிபுரிகின்றனர். கோத்ரேஜ் நிறுவனம் தற்போது பல துறையில் இயங்குவது மட்டும் அல்லாமல் விண்வெளி பயணத்திற்கு தேவையான சில முக்கிய பொருட்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. வெறும் பூட்டில் துவங்கிய கோத்ரேஜ் சாம்ராஜ்ஜியம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வலிமையுடன் நிற்கிறது.
0
Leave a Reply