அருப்புக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ரூ.154.98 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.அருப்புக்கோட்டை நகருக்கு மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.119.58 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்தப் பணிகளில் 22 பெட்டிப்பாலங்களும்,சிறுபாலங்களும், 10 சிறுபாலங்களும், 3 சாலை சந்திப்புகளையும், மேலும் 1 இரயில்வேமேம்பாலம் மானாமதுரை - விருதுநகர் இரயில்வே வழித்தடத்தின்குறுக்கிலும் உள்ளடக்கியுள்ளது. தற்போது இப்புறவழிச்சாலையில்மொத்தம் உள்ள 22 பெட்டிப்பாலங்களும் 9 சிறுபாலங்களும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 சிறுபாலத்தில் மேல்தளம் அமைக்கும்பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை பணிகளில் மொத்தமுள்ள9.905 கி.மீ - தூரத்தில் 7.50 கி.மீ சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.மேலும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் இருபுறமும்பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.மொத்தமுள்ள 9.905 கி.மீ நீள சாலையில் 585.00 மீ சாலை சந்திப்பு பகுதிகள் ஆகும். 936.00 மீ இரயில்வே மேம்பாலப் பகுதிகள் ஆகும்.7.50 கி.மீ சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 884.00 மீ -ல் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறதுமேலும், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைப்பதற்கு நில எடுப்பு பணிக்கு மட்டும் ரூ.35.40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இந்தப் புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறுகலான, வாகன நெரிசல் உள்ள அருப்புக்கோட்டை நகர பகுதியினை தவிர்த்து சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இப்புறவழிச்சாலை அமையும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சாலை பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் திருநெல்வேலி திரு.லிங்குசாமி, உதவி கோட்ட பொறியாளர் திருமதி உமாதேவி, வட்டாட்சியர்கள்(அருப்புக்கோட்டை மற்றும் கோவில்பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply