இயற்கை வேளாண்மையின் அவசியம்
இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது எனலாம். இயற்கை வேளாண்மையின் (Organic Farming) அவசியத்தை உரக்க சொல்லி வருகிறார்கள் இயற்கை வேளாண்மை ஆய்வாளர்கள்.
இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். ரசாயனம் கலந்த மண்ணை மாற்ற அவசியமானதாகவும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் (Healthy Food) வழிவகை செய்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அனைத்து விதமான பயிர் வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்வது வேளாண்மையின் முதல் படியாகும். எனவே நிலத்தினை நன்கு உழுது மண்ணினை உழுவதற்கு எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையினை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை கூட 6 மாதங்களில் இயற்கை வேளாண்மையின் மூலம் மீட்டெடுக்கலாம். ( தொடர்ச்சியாக வரும்)
0
Leave a Reply