வெங்காய பக்கோடா மொறு மொறுப்பாக வர
கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் முட்டை வாடை போய்விடும்.
மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டியாகமலும் இருக்கும்.
சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
ரவா. மைதா உள்ள டப்பாவில் பூச்சி,புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
வெங்காய பக்கோடா மொறு மொறுவென்று வர மாவுடன் சிறிது வறுத்த கடலைப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply