முகம் சுத்தமாக இருக்க...
.வெந்தயத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்15 நிமிடங்களில் கழுவிடலாம். இப்படி செய்வதால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவு பெரும்.பேஷ்வாஷை பயன்படுத்தி கழுவும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுக்கள், கரும்புள்ளிகள் மறையும். முறையாக செய்தால் மட்டுமே அதற்குரிய பலனும் கிடைக்கும். இறந்த செல்கள் வெளிப்புற தோலில் தேங்கி, முகத்தை இறுக்கமாக வைத்திருக்கின்றன. முதலில் நீங்கள் முழுமையாக பேஷ்வாஷ் செய்ய வேண்டும். பின்னர், முகம்சுத்தமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே இறந்த செல்களை அகற்ற முடியும்.
முகத்தை சுத்தம் செய்யும்போது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும். ஒரு சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும். அவற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தை கழுவும்போது அதிகமாக அவர்கள் தேய்த்து கழுவியிருப்பார்கள் அல்லது அதிகப்படியான மேக்கப் கிரீம்களை பயன்படுத்தியிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உங்கள் முகத்தின் வெளிப்புற தோலில் பாதிப்பு ஏற்பட்டு எரிச்சல் மற்றும் சரும பாதிப்புகள் உண்டாகும்.உங்கள் முகத்தின் தோல் அடிப்படையில் மட்டுமே மேக்கப் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால், தோலில் இருக்கும் எண்ணெய்யை அகற்றும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வறட்சியான தோல் என்றால், அதற்கேற்ப மேக்கப் கிரீம்களை பயன்படுத்தலாம். இதனை மாற்றி செய்யும்பட்சத்தில் வறட்சியான முகம் மேலும் வறட்சியாகவும், எண்ணெய் படிந்த முகம் மேலும் எண்ணெய் படிந்தவாறு இருக்கும்.
0
Leave a Reply