மாடி தோட்டத்திற்கு மண்புழு உரம், தொழு உரம் தயாரிக்க
மண்புழு உரம் தயாரிக்க, முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும். கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.
தொழுஉரம் தயாரிக்க ,"காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம். ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும்.அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம். கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும்.அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும். இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக.அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும். இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும்.25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும் மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்".
0
Leave a Reply