‘ உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1” முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் (01.12.2024) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ‘உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1” அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம், உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1 அனுசரித்தல் நிகழ்ச்சி "உரிமை பாதையில்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி. /எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு சேவை அமைப்புகளை மாவட்ட அளவில் ஓருங்கிணைத்து எச்.ஐ.வி தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை அளித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் எச்.ஐ.வி புதிய தொற்றுகள் இல்லாத நிலையினை உருவாக்கிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழக சுகாதார துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும்பிற துறைகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் எச்.ஐ.வி தடுப்பு பணிகளை செயல்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மாவட்டதிட்டமேலாளர்(எய்ட்ஸ்கட்டுப்பாடு)திரு.வேலையா,மேற்பார்வையாளர்கள், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply