விருதுநகர் மாவட்டம் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு சுருக்க திருத்த நடவடிக்கைகள் 01.01.2023 மற்றும் 01.04.2023, 01.07.2023, மற்றும் 01.10.2023 ஆகிய அடுத்தடுத்த நாட்களை அடிப்படையாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறவுள்ளது. சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாறுதல் செய்ய 09.11.2022 முதல் 08.12.2022 வரை விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிட மையங்கள் வட்ட, கோட்ட, நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கள விசாரணைக்கு பினி முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2023 அன்று வெளியிடப்படவுள்ளது.
மேலும் வாக்காளர்களின் வசதிக்காக அவர்களது வசிப்பிடம் அருகில் அமைந்துள்ள வாக்குச்சாவடி அமைவிடங்களில் 26.11.2022 சனிக்கிழமை , 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை, தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள், வாக்குச்சாவடி அமைவிட அலுவலரிடம் தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம்.
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்க(Apply Online) என்ற இணைப்பினை அழுத்தவேண்டும். பொதுமக்கள் தங்கள் விரும்பும் படிவங்களை தேர்வு செய்து, விபரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
01.01.2023 அன்றோ அதற்கு முன்போ 18 வயது பூர்த்தி அடைந்திருந்தால் அல்லது 01.04.2023,01.07.2023 மற்றும் 01.10.2023 ஆகிய அடுத்தடுத்த தகுதி நாட்களில் 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிதாக பெயரினை சேர்க்க விழையும் அனைத்து தரப்பினரும் மேற்குறிப்பிடப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply