பூச்சி, புழுக்கள் அரிசியில் உருவாக காரணம் என்ன?
வண்டுகள்தானிய பருக்கைகளைத் தாக்கி, தானியத்தில் துளைகளை உருவாக்கிவிடும். மேலும் தானியங்களின் நீர்ச்சத்தை உறிஞ்சி, உலர்த்தி விடும். இவ்வாறு பூச்சிப்பிடித்த அரிசியை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினம். வண்டு அல்லது புழுக்களின் பாதிப்பு அதிகம் உள்ள அரிசியை சுத்தம் செய்து சாப்பிட்டால், செரிமான நோய்கள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பிற தானியங்களுடன் ஒப்பிடும்போது, அரிசி மற்றும் கோதுமையில் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே அரிசி மற்றும் கோதுமையை சேமித்து வைக்கும் போது மட்டும் அதிகபடியான பூச்சிகள் தாக்குகிறது என பத்மஸ்ரீ படம்பெற்ற மருத்துவர் காதர் வாலி பிபிசியிடம் தெரிவித்தார்."பட்டைத் தீட்டப் படாத நெல்லில் உமியில் உள்ள நார்ச்சத்து, கவசமாகச் செயல்படுவதால்,30 ஆண்டுகளுக்குப் பிறகும் பூச்சிகள் வராது. ஆனால் அரிசி மற்றும் கோதுமைக்கு, இந்த நார்ச்சத்து உறை மிகவும் மெல்லியதாக இருப்பதால், அவை பூச்சிகளால் எளிதில் தாக்கப்படுகின்றன," என்று டாக்டர் காதர் வாலி விளக்கினார்.
அரிசியில்பூச்சிவிழும்பிரச்னையைத்தடுக்கவல்லுநர்கள்சில நடைமுறைகளை பரிந்துரைக்கின்றனர். "முதலில், அரிசி சேமிக்கப்படும் கலனிலும் அதனை சுற்றியும் ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்," மேலும் சில நிபுணர்கள் கூறுகையில், அரிசி சேமிப்பு கலன்களில் வேப்பிலை, பிரியாணி இலைகள், கிராம்பு, பெருங்காயம், கற்பூரம், பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் கல் உப்பு உதவியுடன் அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்."வேப்பிலை, கிராம்பு, கற்பூரவள்ளி ஆகியவற்றை உலர்த்தி ஒரு மெல்லியத் துணியில் கட்டி அரிசி சேமிக்கும் கலனில் போட்டாலும் அதன் வாசனை பூச்சிகள் வராமல் தடுக்கும்," வேம்பு மற்றும் கிராம்பு பூச்சிகளைத் தடுக்கும் அதீத ஆற்றல் கொண்டவை. அவற்றின் கடுமையான வாசனைக்கு பூச்சி புழுக்கள் அண்டாது. சிலர் போரிக் பவுடரை துணியில் கட்டி அரிசி சேமிப்பு கலன்களில் போட்டு வைப்பார்கள். மேலும், அரிசியில் பூச்சிகள் வராமல் தடுக்க சில ரசாயனங்களும் சந்தையில் கிடைக்கின்றன, "பிரவுன் அரிசி மற்றும் கருப்பு அரிசி ஆகியவை தீட்டப்படாத (பாலிஷ் செய்யப்படாத) அரிசி ரகங்கள் ஆகும். எனவே இவை பட்டை தீட்டப்பட்ட அரிசியை விட பத்து மடங்கு சிறந்தது. எந்த அரிசி வகைகளாக இருந்தாலும், பூச்சிப் பிடிப்பதை தடுக்கும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை,"
0
Leave a Reply