கோதுமை பிரியாணி
தேவையான பொருட்கள் - உடைத்த கோதுமை 1 ஆழாக்கு, உருளைக்கிழங்கு 1, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஒவ்வொன்றும் 50 கிராம், வெங்காயம் 2, பச்சை மிளகாய் 4, இஞ்சி சிறிய துண்டு, பூண்டு 1, கொத்தமல்லித்தழை 1 கட்டு, புதினா 1 கட்டு, பட்டை, கிராம்பு சோம்பு வாசனைக்கு ஏற்றபடி, கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி.
செய்முறை - முதலில் உடைத்த கோதுமையை தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை நறுக்கி வைத்து கொண்டு, வெங்காயம், புதினா, மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி,பட்டை, சோம்பு கிராம்பு இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா, வெங்காயம், புதினா, மல்லி இலை போட்டுக் கிளறவும். பிறகு நறுக்கி வைத்த காய்கறிகளைப் போட்டு தண்ணீர் விட்டு வெந்தவுடன் வேகவைத்த கோதுமையை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கோதுமை பிரியாணி தயார்.
0
Leave a Reply