உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது. ....
ரவையுடன் ஒரு பங்கு கோதுமை* மாவு, இரண்டு பங்கு அரிசி மாவையும் சேர்த்து தோசை செய்தால், ரவா தோசை நன்கு முறுகலாக இருக்கும்.
கிரேவி செய்யும்போது, இறக்கி வைக்கும் முன் சிறிது சர்க்கரை சேர்த்தால் சுவை கூடும்.
பஜ்ஜி செய்யும் போது, பஜ்ஜி மாவுடன் புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து கலந்து செய்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
சேனை கிழங்கை வேக வைக்கும் முன், வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும், கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது. மேலாக சிறிது ரொட்டி துாளை துாவினால், கரகரப்பாக சுவையாக இருக்கும்.
0
Leave a Reply