இளம் வீராங்கனை மனு பாகர் இந்தியாவுக்காக ஒலிப்பிக்கில் அதிக பதக்கம் வெல்வதே குறிக்கோள்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இளம் வீராங்கனை மனு பாகர் ,10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநகர் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் வெண்கலத்தை நழுவவிட்ட இவர் நான்காவது இடம் பிடித்தார்.
நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உடன் மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தார்.ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி வந்தது. மறக்க முடியாத அனுபவம். வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்தார் மனுபாகரின் பயிற்சியாளரும், இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ஐஸ்பால் ராணா கூறுகையில் ஒலிம்பிக் போட்டிக்காக மனு பாகர் நீண்ட காலம் பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபரில் டில்லியில் சுடுதலில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. சிறிய ஒய்வுக்கு பின், 2026-ல் நடக்க உள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டியில் சாதிக்க பயிற்சியை துவக்குவார்.
0
Leave a Reply