25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தழைத்து வளரும் கீரைகள் விவசாயம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தழைத்து வளரும் கீரைகள் விவசாயம் .

ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை, 10 முதல் 20 செண்ட் பரப்பளவில் பத்து வகைகீரைகளை விதைத்து  பராமரித்தால் போதும். தினந்தோனும் கிள்ள கிள்ள (அறுவடை) கீரைகள் அள்ளித்தரும் என்கிறார் மதுரை அருகே கருமாத்தூரை  சேர்ந்த கீரை விவசாயி ஜெயச்சந்திரன்.

விதையில் முளைக்கும் கீரைகளும் உண்டு. ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் 8முதல்9 முறை அறுவடை செய்யும் கீரை வகைகளும் உண்டு. சிவப்பு பொன்னாங்கன்னி கீரை ஒருமுறை விதைத்தால் அடுத்தடுத்து அறுவடை செய்யலாம்.

30 சென்ட் பரப்பில் அரைக்கீரை, 20 சென்ட் அளவில் மணத்தக்காளி, 10 சென்ட் இடத்தில் பாலக்கீரை,5சென்ட் பரப்பில் பொன்னாங்கன்னி, 50 சென்ட் பரப்பில் முருங்கை கீரை நடவு செய்துள்ளேன். இடையே தண்டங்கீரை, சிறுகீரை, அகத்தி கீரை என 80 சென்ட் பரப்பளவில் 8வகை கீரைகளை வளர்க்கிறேன். இன்னும் 40 சென்ட் பரப்பில்' முருங்கை பயிரிடுவதற்கான விதை வாங்கி வைத்துள்ளேன்.

நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல் பாதுகாத்தால் கீரையில் லாபம் இருக்கிறது. நெல்லுக்கு உரமிடு வதைப் போல கீரைகளையும் பராமரிக்க வேண்டும். வீட்டில் மாடுகள் வளர்க்கிறேன். அதனால் முழுவதும் இயற்கை முறையில் தான் கீரை சாகுபடி செய்கிறேன்.

ஆட்டு எரு, மாட்டு சாணம் தான் கீரைகளுக்கு உரம். குறிப் பிட்ட இடைவெளியில் கீரை களுக்கு மாட்டு கோமியம் தெளிக்கிறேன். மாட்டு சாணத்தை கரைசலாக்கி கடலைமாவு, வெல்லம் கலந்து ஜீவாமிர்தம் கடை சலாக தருகிறேன். 

வெயில் நேரத்தில் பாலக்கீரை விதையை ஒருமுறை விதைத்தால் 20 முறை அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில் கூடுதலாக நான்கு முறை அறுவடை செய்ய லாம். பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை வகைகளை 12 நாட்க ளுக்கு ஒருமுறை அறுவடை செய் தால் அடுத்தடுத்து தழைத்து வளரும். முழு அறுவடை முடிந்த பின் அதே இடத்தில் அதே வகை கீரைகளை விதைக்காமல் இடம்மாற்றி விதைக்க வேண்டும் என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News