25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வீட்டின் அறைகளில் காற்றை தூய்மையாக்கும் தாவரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டின் அறைகளில் காற்றை தூய்மையாக்கும் தாவரங்கள்.

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் 'இங்கிலீஷ் ஐவி’ வஎன்ற சிறிய வகை செடி, காற்றில் கலந்திருக்கும் மனித கண்களுக்கு புலப்படாத கிருமிகளை ஈர்த்து அழிக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த தாவரத் தின் அறிவியல் பெயர் ஹெடேரா ஹெலிக்ஸ் என்பதாகும்.

இதனை அறையில் வளர்க்கும்போது, காற்றில் உள்ள பூச்சி மற்றும் சிறிய உயிரினங்களின் கழிவுகளை கிரகித்துக் கொள் கிறது. இந்த செடி சுமார் 12 மணி நேரத்தில், ஒரு அறையில் இருக்கும் பல்வேறு நச்சு கிருமிகளை 94 சதவீதம் வரை வெளி யேற்றி காற்றை சுத்தப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இது வீடுகளில் எஞ்சும் உணவுகளில் படரும் பாக்டீரியா போன்ற தொற்றுகளை கூட ஈர்த்து அறையின் காற்றை தூய் மையாக்குகிறதாம்..

அதே வேளையில், இந்த செடி குழந்தைகள் மற்றும் சிறிய வீட்டு விலங்குகளுக்கு நச்சை ஏற்படுத்தும் என்பதால், இதனை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதே போல், வீட்டில் சுத்தமான காற்றை அளிக்கும் சிறந்த செடிகளாக அலோவெரா என்ற கற்றாழை, ஸ்நேக் பிளான்ட் என்ற பாம்பு செடி, சிலந்தி என்ற ஸ்பைடர் செடி, மணி பிளான்ட், பீஸ் லில்லி, ரப்பர் செடி, மூங்கில், கோல்டன் பொத்தோஸ், ஆகி யவையும் உள்ளன. இவை அறைகளில் உள்ள காற்று மாசுக்களை குறைத்து, உள்கட்டிடத்தை நல்ல முறையில் வைக்க உதவுகின்றன என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News