இரும்பு தோசைக்கல் டிப்ஸ் .
புதிய தோசைக்கல்லில் முதல் சில நாட்கள் முட்டை, ஆம்லெட் அல்லது அடை சுட்டால் சீசனிங் விரைவாக வரும்.
தோசை ஊற்றுவதற்கு முன் அரை வெங்காயத்தில் சிறிது எண்ணெய் தொட்டு கல்லில் தேய்த்தால் தோசை ஒட்டாது.
தோசைக்கல் மிகவும் சூடாக இருந்தால் தோசை சரியாக வராது. சிறிது தண்ணீர் தெளித்து வெப்பத்தை சமநிலைப்படுத்தி தோசை ஊற்றுங்கள்.
பயன்படுத்தி முடித்ததும் கல்லை நன்றாக துடைத்து, மெல்லியதாக எண்ணெய் தடவி வைத்தால் துருப்பிடிக்காது.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், மீண்டும் பயன்படுத்தும் முன் எண்ணெய் தடவி சூடாக்கி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கல்லை தேய்த்து சுத்தம் செய்தால் கல்லில் இருக்கும் துர்நாற்றம் மற்றும் அழுக்குகள் நீங்கும்.
0
Leave a Reply