தேங்காய் கோவா அல்வா
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பால், சர்க்கரை தலா அரை கப், கோவா, நெய் - தலா கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை தேங்காய் துருவலை பால் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் தேங்காய் பால் விழுதைக் கொட்டி மிதமான தீயில் கிளறவும், சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். கெட்டியாகும் பதத்தில் நெய் சேர்த்துக் கிளறி பாதாம், முந்திரி துண்டுகளை நெய்யில் வறுத்து தூவவும்.
0
Leave a Reply