25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நெய் கடலை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெய் கடலை .

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – 200 கிராம்,வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது),

கறிவேப்பிலை – 2 கொத்து, மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,

மிளகுப் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன் ,

பெருங்காயப் பொடி – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,

கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவு

செய்முறை

கடலை பருப்பினை அலசி சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வெள்ளைப் பூண்டினை தோலுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.வைக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.

ஊறிய கடலை பருப்பினை வடிதட்டில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

தண்ணீர் நன்கு வடிந்ததும் உலர்ந்த துணியில் பருப்பினைக் கொட்டி விடவும். பருப்பின் மேற்புறம் ஓரளவு காய்ந்ததும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பில் சிறிதளவு போடவும். கடலைப் பருப்பு எண்ணெயில் அடியில் இருக்கும்.

கடலைப் பருப்பு வெந்ததும் படத்தில் உள்ளபடி எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து விடும்.எண்ணெய் குமிழி அடங்கி சலசலவென வெந்ததும் கடலை பருப்பினை வெளியே எடுத்து விடவும்.

வெந்த கடலை பருப்பினை வெளியே எடுக்க வலைக் கரண்டியை உபயோகிக்கவும். அப்போதுதான் வெந்த கடலைப் பருப்பினை ஒரே சீரான நிறத்துடன் கருகாமல் எடுக்க முடியும்.இவ்வாறாக எல்லா கடலைப் பருப்பினையும் வேக வைத்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

தட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினை சிறிதளவு எண்ணெயில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வறுத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வறுத்த வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.சுவையான நெய் கடலை தயார்.

கடலைப் பருப்பு நன்கு ஊறினால்தான் வறுத்த பின் மொறு மொறுவென்று இருக்கும்; இல்லையெனில் கடிக்கும் போது கடினமாக இருக்கும்.

வெள்ளைப் பூண்டினை சேர்க்க விருப்பாதவர்கள் பூண்டினைத் தவிர்த்து விடலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News