வாழைத்தண்டு கூட்டு.
தேவையான பொருட்கள்
2கப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு,
1/2கப் பாசி பருப்பு,
1/2மூடி தேங்காய்,
1ஸ்பூன் சீரகம்,
7,8சாம்பார் வெங்காயம்,
2 பச்சை மிளகாய்,
தேவையான அளவு உப்பு,
1ஸ்பூன் எண்ணெய்,
1ஸ்பூன் கடுகு,
1கொத்து கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி அதில் இருந்து நாரை விரலில்சுற்றி எடுத்து விட்டு பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்...இல்லை என்றால் நிறம் மாறி விடும்..
பருப்பை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி அரை பதம் வெந்ததும் தண்டை சேர்த்து வேக விடவும்..
மிக்ஸியில் தேங்காய், மிளகாய், வெங்காயம், சீரகம் சிறிது தண்ணீர் விட்டுஅரைத்து வெந்த வாழை தண்டுடன் சேர்த்து உப்பும் சேர்த்து கொதிக்க வைக்கவும்...
எல்லாம் வெந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்...
இப்போது வாழைத்தண்டு கூட்டு தயார். இது வத்த குழம்புடன் சாப்பிடஅருமையாக இருக்கும்...
0
Leave a Reply