25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கடலைப்பருப்பு கார தோசை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடலைப்பருப்பு கார தோசை.

தேவையான பொருட்கள்: 

இட்லி அரிசி - 1 கப்,கடலை பருப்பு – கால் கப்,துவரம் பருப்பு - கால் கப்,

உளுந்து - 1 ஸ்பூன்,வர மிளகாய் – 5,சின்ன வெங்காயம் – 15,பூண்டு - 7 பல்,

கறிவேப்பிலை – சிறிதளவு,கடுகு – அரை ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,

மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு ,

செய்முறை: 

இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த அரிசி, பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, எண்ணெய் தடவவும்.

அரைத்த மாவை எடுத்து தோசைக்கல்லில் பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.இதே முறையில் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்கவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News