25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


.சீவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.சீவல்.

தேவையான பொருட்கள்-

இட்லி அரிசி – 400 கிராம்,பொரிகடலை – 200 கிராம்,மிளகாய் வற்றல் – 8 எண்ணம்,

வெள்ளைப் பூண்டு – 3 பல் (பெரியது),பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,

வெண்ணெய் – 25 கிராம்,உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை-

இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.

அரிசியை கிரைண்டரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து மிளகாய் வற்றலை சிறிது சிறிதுதாகக் கிள்ளி அரிசியில் சேர்த்து ஆட்டவும்.

பின் வெள்ளைப் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரிசியில் சேர்த்து ஆட்டவும்.அரிசி மாவுக் கலவையினை மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

முறுக்கு உழக்கில் சீவலிற்கான‌ அச்சினைப் போட்டு மாவினை அடைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.

எண்ணெய் காய்ந்ததும் மாவினை சீவல்களாகப் பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும்.சீவலில் எண்ணெய் குமிழி அடங்கியதும் சீவலை எடுத்து விடவும். சுவையான சீவல் தயார்.

நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும். இதனை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இச்சிற்றுண்டியை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்பர்.

வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும்போது சிறிதளவு புளியைச் சேர்க்கவும். இதனால் எண்ணெய் பொங்குவது தவிர்க்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News