25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


காளான் கிரேவி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காளான் கிரேவி .

தேவையானவை:

நறுக்கிய பட்டன் காளான் - 200 கிராம், வறுத்து அரைக்க: கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - ½டீஸ்பூன், சோம்பு-1 டீஸ்பூன், பிரியாணி இலை -1, மிளகு - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3, சிறு அன்னாசிப்பூ - 1, பட்டை -2, இலவங்கம், ஏலக்காய் - 4, தேங்காய்த் துருவல் - % கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி நைசாக அரைத்தது-12. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, பொடியாக கட் செய்த கொத்தமல்லித் தழை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -½ கப், பொடியாக நறுக்கிய தக்காளி - 1. சோம்பு -½ தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

அரைக்க வேண்டிய பொருட்களைத் தனித்தனியாக லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாகப் பொடி செய்து வைக்கவும். தேங்காயையும் வறுத்துப் பொடித்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பின் காளான் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி10 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்துத் தேவையான அளவுதண்ணீர் ஊற்றிவேகவைத்து முந்திரி விழுது சேர்த்துக் கலந்து2 நிமிடம் கொதிக்க விடவும். பின் நெய் சேர்த்து மூடி, சிம்மில் வைத்து2 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News