குதிரைவாலி தோசை
தேவையான பொருட்கள் - 2 கப் குதிரைவாலி அரிசி, முக்கால் கப் இட்லி அரிசி,முக்கால் கப் உளுந்து, அரை ஸ்பூன் வெந்தயம்
செய்முறை - குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.
குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐந்து முறை கழுவ வேண்டும். பின்னர் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறிய பின்னர், ஊறவைத்த தண்ணீரை வைத்தே மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து கரைத்து 6 லிருந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
பின்னர் தோசை மாவு பதத்திற்கு கரைத்து, தோசை கல்லில் நெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும்.ஆரோக்கியமான குதிரைவாலி தோசை தயார். சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply