வீட் பிரெட் வெஜ் உப்புமா
தேவையான பொருட்கள்
12 ஸ்லைஸ்வீட் பிரெட்
1சின்ன எலுமிச்சம் பழம்
1பெரிய வெங்காயம்
1மீடியம் சைஸ் தக்காளி
1 சின்ன குடமிளகாய்
2 பச்சை மிளகாய்
சிறு துண்டுஇஞ்சி
1ஸ்பூன்தனி மிளகாய் தூள்
1டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
உப்பு ருசிக்கு
தாளிக்க:-1 டீ ஸ்பூன்கடுகு, 1ஸ்பூன் க.பருப்பு,1ஸ்பூன்உ.பருப்பு,2 சி.மிளகாய்,2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்,1 கொத்து கறிவேப்பிலை,
தேவைக்கு கொத்தமல்லி இலை
அலங்கரிக்க:-நறுக்கின வெங்காயம், குடமிளகாய் கொத்தமல்லி தழை
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், இஞ்சி, குடமிளகாயை பொடியாக நறுக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுக்கவும்.
பிரெட்டின் நான்கு ஓரங்களையும் வெட்டி, சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். தாளித்ததும், வெங்காயம், ம.தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, வதக்கவும்.வதங்கியதும், தக்காளி, குடமிளகாய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.அடுத்து பிரெட் துண்டுகளை போடவும்.
பின் பிரெட் உடையாமல் கிளறி, எலுமிச்சை சாறை ஊற்றி, அடுப்பை நிறுத்தி விடவும்.மேலே கொத்தமல்லி தழையை போட்டு ஒன்று சேர மெதுவாக கிளறி இறக்கவும்.இறக்கினதும், பிளேட்டிற்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*வீட் பிரெட் வெஜ் உப்புமா*தயார்.
0
Leave a Reply