ராகி கொள்ளு தோசை
தேவையான பொருட்கள்-1கப் முழு ராகி,1/4கப் கொள்ளு,2டேபிள்ஸ்பூன் மாவு ஜவ்வரிசி,1ஸ்பூன் வெந்தயம்,
தேவையானஅளவு உப்பு
செய்முறை -
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி8,10மணி நேரம் ஊற வைக்கவும்.
8மணி நேரம் கழித்து,ஊற வைத்தவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவை மிகவும் தண்ணீயாக கலக்காமல்,இட்லி பததிற்கே தயார் செய்து,8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவில், தோசைக்கு தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், மெல்லியதாக விரித்து விடவும். எண்ணெய் சேர்க்காமலேயே மொறு மொறு மொறுப்பாக வரும்.சுவையான,சத்து நிறைந்த தோசை ரெடி.தக்காளி,புதினா,மல்லி,தேங்காய் சட்னி,என எல்லா சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.
0
Leave a Reply