வெஜ் மசாலா பிரட் உருண்டை
தேவையான பொருட்கள்
12 ரொட்டித் துண்டுகள்
2 உருளைக்கிழங்கு
சிறிதளவுகேரட் பீன்ஸ் பட்டாணி
ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் கரம் மசாலா
கால் ஸ்பூன் சீரகத்தூள்
2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
கால் ஸ்பூன் ஓமம்
சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி புதினா இலைகள்
பொறிக்க தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி வேகவைத்து கொள்ளவும். பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தயார் படுத்திக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை வெட்டி லேசாக தண்ணீரில் நணைக்கவும்.
ரொட்டி துகள்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்
வேக வைத்த காய்கறிகளை மசித்து கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா ஓமம் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து செய்யவும்.
நனைத்த ரொட்டித் துண்டுகளின் நடுவில் வேகவைத்த காய்கறி கலவைகளை உருட்டி வைத்து, அதனை ரொட்டி துண்டால் மூடி ரொட்டித் துகள்களில் பிரட்டி உருண்டை பிடிக்கவும்.
இந்த உருண்டைகளை காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான ஆரோக்கியமான வெஜ் மசாலா பிரட் உருண்டை தயார் .
0
Leave a Reply