பிரட் காரவடை
தேவையான பொருட்கள்
கடலை மாவு- 2 கப்
.பிரட்-3 சதுர துண்டுகள்
சமையல்சோடா- 1 பின்ச்
உப்பு -தேவைக்கு
மிளகாய்தூள் - 1ஸ்பூன்
பச்சைமிளகாய் 1
சின்னவெங்காயம்- 10
சமையல் எண்ணெய் தேவைக்கு
கருவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம்- கால்ஸ்பூன்
தண்ணீர்- தேவைக்கு
செய்முறை
முதலில் கடலை மாவை சல்லடையில் அலசி வைத்துக்கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்துவைத்துக் கொள்ளவும்.கடலைமாவு,உப்பு, மிளகாய் தூள்,சோடாஉப்பு 1பின்ச்,பெருங்காயம், கட் பண்ணியவெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை,தண்ணீர் சேர்த்துவடை பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
பிரட் துண்டுகளை சிறிதுசிறிதாக பிய்த்து கைகளால் உதிர்த்துவிடவும்.பின் மாவை பிரட் உடன் சேர்த்து கலந்து விடவும்.வடை கரண்டியில் எண்ணெயில் ஊற்றும் அளவு மாவுபதம் இருக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சுடனாதும் மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும்.இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுத்துவிடவும்.பிரட்கார வடை ரெடி.
0
Leave a Reply