தினை அரிசி பீட் ரூட் தோசை
தேவையான பொருட்கள்-2 கப்தினை,2 மேஜை கரண்டி அரிசி,½கப்முழு உளுந்து,1 தேக்கரண்டி வெந்தயம்,1கப் பீட்ரூட், வேகவைத்து துருவியது,1 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது,4பச்சை மிளகாய்,½கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது.2 மேஜை கரண்டி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி ஈஸ்ட், தேவையான எண்ணெய்,தேவையான உப்பு.
செய்முறை-
ஓரு குக்கரில் பீட்ரூட், நீராவியில் வேகவைத்து பின் தோலுரித்து துருவவும்.மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் தினை, அரிசி லேசாக வறுக்கவும். பொறிந்து வாசனை வரும். வேறொரு பாத்திரத்திக்கு மாற்றி 6 கப் நீர் சேர்த்து ஊறவைக்கவும். உளுந்து , வெந்தயம் 3 கப் நீரில் 6 மணி நேரமாவது ஊறவேண்டும்.
வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து, வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அரைக்கவும். பின் தினை, அரிசி, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைக்க. மாவுகளை ஒன்றாக சேர்க்கவும். அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் சேர்த்து ,ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவி எப்பொழுதும் போல தோசை செய்வது போல சுடவும் .தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2,3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.
0
Leave a Reply