25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல்

Jan 24, 2025

சிறுதானிய பருப்பு அடை

தேவையான பொருட்கள் 50 கிராம்சோளம், 50 கிராம்கம்பு, 50 கிராமிகவுனி அரிசி50 கிராம்கோதுமை , 50 கிராம்கேழ்வரகு , 50 கிராம்திணை.50 கிராம் வரகு ,50 கிராம் சாமை , 50 கிராம் குதிரைவாலி100 கிராம் உளுந்து , 25 கிராம் குழம்பு கடலை பருப்புதேவையான அளவுஉப்பு செய்முறை.ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் .சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

Jan 24, 2025

கம்பு சோள கார பணியாரம்.

தேவையான பொருட்கள்1 டம்ளர் இட்லி அரிசி,1/2டம்ளர் கம்பு,1/4டம்ளர் சோளம்,1/4 கப் உளுந்து பருப்பு,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் கடலை பருப்பு செய்முறை.கம்பு ,சோளம், இட்லி அரிசி, உளுந்து பருப்பு ,வெந்தயம் ,அனைத்தையும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும். பின் மாவில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்டி கலக்கவும். அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் தடவி பின் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

Jan 17, 2025

சோயா சப்பாத்தி

தேவையான பொருட்கள் -  கோதுமை மாவு 2 கப், சோயா மாவு - அரை கப். நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.செய்முறை  - மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில், எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். வழக்கம்போல தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி வேக விடுங்கள். 

Jan 17, 2025

வாழைப்பழ சப்பாத்தி

தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - ஒரு கப், வாழைப்பழம் - 1. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு. செய்முறை - வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.எண்ணெய், நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி. 

Jan 17, 2025

முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள் -  கோதுமை மாவு - 2 கப். நெய் - 2 டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் நெய் கலவை தேவையான அளவு. பூரணத்துக்கு: முள்ளங்கி துருவல் ஒன்றரை கப் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலா தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு  டேபிள்ஸ்பூன். செய்முறை - முள்ளங்கியை தோல் சீவி துருவுங்கள். எண்ணெயைக் காய வைத்து முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கி, அதில் கொடுத்துள்ள தூள்களை சேர்த்து சுருள கிளறி இறக்குங்கள். கோதுமை மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையுங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து சிறிது பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மூடி, சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போடுங்கள். இருபுறமும் எண்ணெய் - நெய் கலவை ஊற்றி கட்டெடுங்கள்.குறிப்பு: ஸ்டஃப் செய்யும் சப்பாத்திகளை திரட்டும்போது, மாவை கிண்ணம் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து தேய்க்கும்போது. பூரணம் சிறிது வெளியே வர வாய்ப்புண்டு. அதற்கு பதிலாக, ஒரு சப்பாத்திக்கு உரிய மாவை எடுத்து, அதை இரு உருண்டைகளாக்கி, இரு மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள். ஒரு சப்பாத்தியின் மேலே பூரணத்தை மெல்லிய அடுக்காக பரப்பி, அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடுங்கள். இம்முறையில் பூரணம் வெளியே வராது. 

Jan 17, 2025

காலிஃப்ளவர் சப்பாத்தி

தேவையான பொருட்கள் -  கோதுமை மாவு 2 கப். நெய் 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,பூரணத்துக்கு: பொடியாக துருவிய காலிஃப்ளவர் - கப், தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், துருவிய வெங்காயம் 2 டீஸ்பூன். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி -2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு -தேவையான அளவு.செய்முறை - மாவை நெய். உப்பு சேர்த்து பிசையுங்கள். காலி ஃப்ளவருடன் வெங்காயம். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து அழுத்தி வையுங்கள். 10 நிமிடம் கழித்து நன்கு பிழிந்தெடுங்கள். அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து வையுங்கள். இதுதான் பூரணம்.பிறகு கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, முள்ளங்கி சப்பாத்தி போலவே செய்து சுட்டெடுங்கள். ருசியான மாலை டிபன். 

Jan 17, 2025

மசாலா சப்பாத்தி

தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப், மிளகாய்தூள் -அரைடீஸ்பூன், கரம் மசாலாதூள்.- ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன், எண்ணெய் -நெய் கலவை - தேவையான அளவு.செய்முறை - கோதுமை மாவுடன் மிளகாய்தூள், சுரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய் எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக திரட்டி. தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம் மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி, 

Jan 17, 2025

பாலக் சப்பாத்தி

தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு அரைக்க: பசலைக்கீரை (பாலக்) - ஒரு கட்டு, பச்சை மிளகாய் -3, இஞ்சி -ஒரு துண்டு, உப்பு - சிறிதளவு.செய்முறை - பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். விசிலைத் தூக்கி பிரஷரை வெளியேற்றிவிட்டு, குக்கரைத் திறந்து வையுங்கள். ஆறியதும், அவற்றை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து, வழக்கம் போல சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.  

Jan 10, 2025

சாமை தோசை

தேவையான பொருட்கள் – ஒரு கப் சாமை அரிசி, கால் கப் முழு உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, தேவையான எண்ணெய்செய்முறை  -தேவையான பொருட்களை எடுத்து5 மணி நேரம் அரிசி உளுந்து தனித்தனியாக ஊற வைக்கவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, வெந்தயம் நன்றாக நைசாக அரைக்கவும். பிறகு சாமை அரிசியை சேர்த்து நன்கு அரைக்கவும்.அதில் கல் உப்பு சேர்த்து கலக்கி ஆறு மணி நேரம் வைக்கவும்.அது நன்கு பொங்கி வந்திருக்கும். இப்பொழுது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல், கார சட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே சுவையாக இருக்கும்.

Jan 10, 2025

கம்புமாவு முருங்கைக்கீரை தோசை

தேவையான பொருட்கள் – 2 கப்கம்புமாவு, கால்கப் அரிசிமாவு , கால்கப்தோசைமாவு, தேவைக்குதண்ணீர், தேவைக்கு உப்பு,1 கப் கட் பண்ணிய முருங்கைக்கீரை இலை,1 வெங்காயம், 1பச்சைமிளகாய் , தேவைக்குசமையல் எண்ணெய்செய்முறை -கம்புமாவு, தோசைமாவு, அரிசி மாவு, உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கலக்கவும்.தோசைமாவு பதம் இருந்தால்போதும். பச்சைமிளகாய், வெங்காயம் கட்பண்ணிசேர்க்கவும்.முருங்கைக்கீரையைகைபார்த்து இலைகளை சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு, சுற்றிஎண்ணெய் விட்டுதோசை சுடவும்.கம்புதோசை ரெடி.சூடாகச்சட்னிவைத்துசாப்பிடவும்.சத்தான இரும்புசத்து நிறைந்தது. தோசைமேலேயும் கீரையை தூவி சுடலாம்.நன்றாக இருக்கும்.மாவுடன்கலந்தும் சுடலாம். மேலே தூவியும் சாப்பிடலாம்.

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 52 53

AD's



More News