கருஞ்சீரகத்தில் துவையல்
தேவையானபொருட்கள்
கருஞ்சீரகம் – கால் கப்
(இதை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து ஆறவைக்கவேண்டும்.
அதே கடாயில் இரண்டு மிளகாய்களையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தும் ஆறியபின் மிக்ஸி ஜாரில் அல்லது கையில் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
கடைசியாக வறுதத் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் மையாக அரைத்து விடக்கூடாது.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
கருஞ்சீரகம் பல்வேறு நன்மைகள் நிறைந்து என்பதால் இதைஅவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது
0
Leave a Reply