கருணைக்கிழங்கு தோல் துவையல்
தேவையான பொருட்கள் -
1/4 கிலோகருணைக்கிழங்கு, 2 பெரியவெங்காயம்,
2 தக்காளி,6 வரமிளகாய்,1/4 கப் துருவிய தேங்காய்,
1கைப்பிடி கொத்தமல்லி தழை,2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு,
1/4 டீஸ்பூன் கடுகு உளுந்து,2 கொத்து கருவேப்பிலை,
தேவையான அளவு உப்பு,தேவையான அளவு எண்ணெய்
செய்முறை-
முதலில் கருணைக்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் பிறகு அதன் தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு கடாயில்3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு எடுத்து வைத்த கருணைக் கிழங்கின் தோல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு தேங்காய்த் துருவலை சேர்த்து வதக்கவும்
பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்கி5 நிமிடங்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சுவையான ஆரோக்கியமான கருணைக்கிழங்கு தோல் துவையல் தயார்
0
Leave a Reply