25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரதமர் மோடி ,உலக கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் அவரது இல்லத்தில் சந்திப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதமர் மோடி ,உலக கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகள் அவரது இல்லத்தில் சந்திப்பு.

நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பெண்கள் உலக கோப்பை தொடரில் முறையாக முதன் சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கி, நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்'  அணிந்தருந்தனர். உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா, காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.

உலக கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிறஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனை வரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனை களுக்கு பிரதமர் மோடி பாராட்டுதெரிவித்தார். தங்களது வெற்றி அனுப வங்களை வீராங்கனைகள் பகிர்ந்துகொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News