கோதுமை ரவை இட்லி!
தேவையானவை :
கோதுமைரவை - 1 கப், கெட்டித் தயிர் - 1 கப்,வெள்ளை உளுந்து - 1/4 கப், கடுகு - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வெள்ளை உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் கோதுமை ரவையைப் போட்டு வறுக்கவும். ஆறியதும் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். அத்துடன், அரைத்த உளுந்தைச் சேர்த்து இட்லி மாவுக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைக்கவும். தாளிப்புக் கரண்டியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு,நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்து மாவில் கொட்டிக் கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லிகளாக ஊற்றி வேகவைக்கவும்.
0
Leave a Reply