எக் சாண்ட்விச்
.தேவையான பொருட்கள்
1. 2 துண்டு பிரட் ஸ்லைஸ்
2.1 மீடியம் சைஸ் வெங்காயம்
3. 1/ 4 குடைமிளகாய்
4. 1/ 4 தக்காளி
5. 2 டீஸ்பூன் மயோனிஸ்
6. 1டீஸ்பூன் டொமட்டோ சாஸ்
7. 1/2 டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்
8. 1/2 டீஸ்பூன் பெரி பெரி மசாலா
9. 1/2 டீஸ்பூன் வெண்ணெய்
10. 1 முட்டை
11. 1 சீஸ் ஸ்லைஸ்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மயோனிஸ் டொமேட்டோ சாஸ் பெரி பெரி மசாலா மிக்ஸட் ஹெர்ப்ஸ் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.முட்டை, உப்பு,பெரி பெரி மசாலா, இவையானத்தையும் கலந்து முட்டையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.பிரட்இல் கலந்து வைத்துள்ள இந்த மயோனிஸ் கலவையை தடவும். வெங்காயம் குடைமிளகாய் தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
மயோனிஸ் கலவை தடவி வைத்துள்ள பிரட்டின் மேல்,வெங்காயம், குடைமிளகாய்,தக்காளி இவை அனைத்தையும் வைத்து, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், மேலே தூவி பொறித்து வைத்துள்ள முட்டையை வைத்து, அதன் மேல் மீதம் உள்ள மயோனைஸ் கலவை மற்றும் சீஸ் மற்றொரு பிரட்டை வைத்து முடி சாண்ட்விச் கிரில் பேனில் வைத்து மேலே வெண்ணெய் தடவி இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும். எக் சாண்ட்விச் தயார்.
0
Leave a Reply