25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தேன்குழல் முறுக்கு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேன்குழல் முறுக்கு

தேவையான பொருட்கள் -

2,1/2 கப் பதப்படுத்தின பச்சரிசி மாவு, 1/2 கப் வறுத்தரைத்த உளுத்தம் மாவு,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்எள்ளு,பெருங்காயம், உப்பு,பொரிப்பதற்கு எண்ணெய்,1டேபிள்ஸ்பூன் வெண்ணை

செய்முறை - 

பச்சரிசியை ஊறவைத்து திரித்து வாணலியில் வறுத்துவைக்கவும். (கோலம் போட்டால் இழை வருவது மாதிரி)

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும் . 

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு சேர்த்து கலந்து, எள்ளு, சீரகம், தேவையான உப்பு நன்கு கலந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு பண்ணி,கலந்து வைத்திருக்கும் மாவில் வெண்ணை, மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு, கிளறி தேவையான தண்ணி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். (சப்பாத்தி மாவு பதம்)

முறுக்கு ஒழக்கில் எண்ணெய் தடவி, தேன்குழல் அச்சு போட்டு எண்ணெயில் முறுக்கு பிழிந்து விட்டு, இரண்டு பக்கமும் திருப்பி போட்டு ஓசை அடங்கியதும் எண்ணெயில் இருந்து எடுத்து விடவும்.

வாயில் போட்டதும் கரை ந்து போகும் அளவுக்கு மொறு மொறு முறுக்கு சுவைக்க தயார் .குழைந்தைகளுக்கு பிடித்தமானது செய்து குடுத்து மகிழவும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News