முட்டை பணியாரம்
தேவையான பொருட்கள்
1. 4 முட்டை
2. இரண்டுபல்லாரி வெங்காயம்
3. ஒன்று பச்சை மிளகாய்.
4. அரைடீஸ்பூன்மிளகுத்தூள்
5. ருசி கேற்ப உப்பு
6. ஐந்து மேஜை கரண்டி ஆயில்
செய்முறை
முதலில் ஒரு வாணலியில்,இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், பச்சை மிளகாய் ,சேர்த்து பாதி அளவு வேக விட்டு வதக்கிஎடுத்துக் கொள்ளவும்.வதக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,உடன் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.பணியார கல்லை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் சூடானதும்,எண்ணெய் விட்டு ஒவ்வொரு குழிகளிலும் இந்த கலவையை ஊற்றவும். ஒருபுறம் வேகவும் திருப்பி விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து விடலாம். இப்பொழுது மிக மிக ருசியான சத்துக்கள் நிறைந்த முட்டை பணியாரம் தயார். சிறு குழந்தைகளுக்கு பிடித்தமான மிகவும் சத்து நிறைந்த பணியாரம்
ரெசிபி. முட்டையை வைத்து செய்வது மிக மிக சுலபம் ருசியும் அருமையாக இருக்கும்
0
Leave a Reply