.தட்டை
தேவையான பொருட்கள் -
2 டேபிள்ஸ்பூன் உளுந்தம் பருப்பு,1டேபிள்ஸ்பூன் உடைத்த கடலை,
தேவையானஅளவு பெருங்காயம்,1 கப்அரிசிமாவு,1டேபிள்ஸ்பூன்சீரகம்
1டேபிள்ஸ்பூன் எள்ளு,தேவையானஅளவு கருவேப்பிலை,
தேவையான அளவு உப்பு,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,2டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,தேவையான அளவு தண்ணீர்,
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை-
ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு சேர்த்து ,நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் வறுத்த உளுந்தம் பருப்பு, உடைத்த கடலை, பெருங்காயம் சேர்த்து நன்கு அறைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த பொடி, உப்பு, மிளகாய் தூள்,கருவேப்பிலை, எள்ளு, ஊறவைத்துள்ள கடலை பருப்பு ,சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து பிசையவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டி ,வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான தட்டை தயார்.
0
Leave a Reply