சீஸி ரொட்டி ஆம்லெட்
தேவையான பொருட்கள்
1. 2 முட்டை
2. 2பிரட் துண்டுகள்
3. சீஸ் துண்டு
4.வெங்காயம்
5. 1/2 குடமிளகாய்
6.1 ஸ்பூன் மிளகு தூள்
7. தேவையான அளவு உப்பு
8. வெண்ணை
செய்முறை
முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். பிறகு தவாவில் வெண்ணை தடவி உருகியதும், தயாராக உள்ள முட்டை கலவையை அதன் மீது ஊற்றி பரப்பி வேகவிடவும்.பிறகு அதின்மேல் சீஸ் துண்டு, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் அதன் மீது பிரெட் ஸ்லைஸ் வைத்து நான்கு புறமும் மடித்து எடுக்கவும். சீஸி ரொட்டி ஆம்லெட் தயார்.
0
Leave a Reply