கண்டந்திப்பிலி ரசம்
தேவையானவை: கண்டந்திப்பிலி - 100 கிராம், துவரம் பருப்பு, மிளகு, நெய் மற்றும் கடுகு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-இரண்டு, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில்நெய் விட்டு, மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு மற்றும் ஒடித்த கண்டந்திப்பிலியைச் சேர்த்து வறுக்கவும். பின், மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: காய்ச்சல், உடல் வலி இருக்கும் சமயங்களில் இந்த ரசம் வைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வறுத்த மணத்தக்காளி வற்றல் அல்லது பருப்புத் துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.
0
Leave a Reply