வாழைத்தண்டு சூப்'
தேவையான பொருட்கள்-வாழைத்தண்டு - 1| தக்காளி-1/ சின்ன வெங்காயம் - 6 | பெரிய வெங்காயம் - 1 | பூண்டு பல் - 10 | சீரகம் - அரை ஸ்பூன் | மிளகு - அரை ஸ்பூன் | இஞ்சி - 1" அளவு | உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
செய்முறை
வாழைத்தண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.குக்கர் ஒன்றில்சிறிதளவு தண்ணீருடன் வாழைத்தண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.பின் மிக்ஸர் ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியேதயாராக எடுத்து வைக்கவும். சூப் தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம்(நறுக்கிய) இஞ்சி சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் 'மிக்ஸியில் அரைத்தது, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.கால் கப் தண்ணீரில்ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்துகரைத்துஅடுப்பில் கொதிக்கும்சூப்பில் சேர்த்து கலந்து8 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.வாழைத்தண்டு சூப் ரெடிஇறுதியாக இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி.
இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
0
Leave a Reply