25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


சோயா உருளைக்கிழங்கு குருமா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சோயா உருளைக்கிழங்கு குருமா.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு,1 வெங்காயம்,2தக்காளி,ஒரு கப்மீல் மேக்கர்,
ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,1பட்டை,2கிராம்பு,
ஒரு கொத்துகறிவேப்பிலை,4 ஸ்பூன்தேங்காய் விழுது4 டீஸ்பூன் எண்ணெய்,
4 டீஸ்பூன்குழம்பு மிளகாய் தூள்,கைப்பிடி அளவுகொத்தமல்லி தழை .

செய்முறை: 

மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றி
நன்றாக பிழிந்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை அரைத்து
விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு மீல் மேக்கர் சேர்த்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைக்கவும்.

தேங்காய் விழுது சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும். இந்த குருமா
சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News