மாம்பழ பான் கேக்.
தேவையான பொருட்கள் -
மைதா 2 கப்,
சர்க்கரை 1 கப்,
பால் 1/2 கப்,
தேவையான அளவு - மாம்பழ ஜூஸ்,
செய்முறை -
நன்றாகச் சலித்த 2 கப் மைதா மாவில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.நன்றாக கலந்த பின்னர் சிறிது சிறிதாக அந்த கலவையில் பாலை ஊற்றி, தோசை மாவு பதத்தில் கொண்டு வரவும்.
அந்தக் கலவையில் மாம்பழ ஜூஸ் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.மாவு தயாரான பின்பு ஒரு தோசைக்கல்லை காயவைத்து குழி கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும்.
முட்டையில்லாத மாம்பழ பான் கேக் தயார்.
0
Leave a Reply