உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்கள்
சுரைக்காயில்சுமார்90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற'சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதயத்தை பராமரிக்கிறது.சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது இஞ்சி,ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர் க்கவும்.அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கல்உப்பு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.இவ்வாறு தயாரித்த சுரைக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது.சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.
.இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து, துருவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதனை மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்குமுன்னதாக எடுத்துக்கொண்டால் நல்ல ப லன் கிடைக்கும்.இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வு தொல்லைஆகியவைநீங்கி'ஜீரணசக்திஅதிகரிக்கும்.அதேபோல் இது உடலில் கெட்ட கொழுப்புகளை தங்கவிடாமல் உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.
0
Leave a Reply