அஞ்சல் குறியீட்டு எண் (பின்கோடு) எண்ணை பார்த்திருக்கிறீர்களா?
குழந்தைகளே உங்கள் வீட்டிற்கு தபால் வந்த போது அதில் இருக்கிற பின் கோடு எண்ணை பார்த்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் ஆறு இலக்க எண்களின் காரணமாகவே தபால்கள் உங்கள் வீட்டை தேடி வருகின்றன.
அஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (பின்கோடு) என்பது அஞ்சல் சேவைகளை வழங்கிட உருவாக்கப்பட்டது. இது அஞ்சல் அலுவலகங்களைக் குறிப்பிட பயன்படுகிறது. இந்த எண் ஆறு இலக்கங்களை கொண்டது. இந்த எண் முறை ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி 1972-ம் ஆண்டு இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது. அஞ்சல் குறியீட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது என்பதை குறிப்பிடுகிறது. இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும், இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தையும் குறிக்கின்றன.
0
Leave a Reply