காளான் வளர்ப்பு முறை
காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம்சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.போலிக்ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது.சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்புசத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றதாதுக்களும் காளானில் உள்ளன.
காளான் வகைகள் மொத்தம் சுமார் 20,000 வகைகள் உள்ளன.இந்தியாவில் மட்டும் 2,000 வகைக்காளான்கள் இருப்பதாகவும் இதில்சிப்பிக் காளான், மொட்டுக்காளான் நாட்டுக் காளான்,அரிசிக் காளான் மற்றும்பால் காளான் போன்றவைபயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில்,நல்லவை என்று நன்குதெரிந்த பின்பே உண்ணவேண்டும்.
.காளான் வளர்ப்பு முறையில்(kalanvalarpu) சுத்தமான வைக்கோல் 12 இஞ்ச் நீளத்தில் வெட்டி 68 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊறவைக்க வேண்டும்.பின் வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியிலோ(அல்லது) சுடு தண்ணீரில் 2 மணிநேரம் அழுத்தி வைக்கவும்.தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு, சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்தல் வேண்டும்.
P.P(1 அடிக்கு2 அடி) கவரில்5 அடுக்கு வருமாறு இரண்டு படுக்கை2¾-3 வரை இருக்குமாறு தயார் செய்ய வேண்டும்.சுத்தமானS.S(STAINLESSSTEEL) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட வேண்டும். படுக்கை வெள்ளையாக மாறிய பின் தினமும்3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.மொட்டு வைத்த3 வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
0
Leave a Reply