25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மூப்புத் தசையிழப்பு நோய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூப்புத் தசையிழப்பு நோய்.

இந்தத் தொல்லை அதிகமாக பொதுவாக முதியோர்களுக்கே வருகிறது. எனவே, முதுமைதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், முதுமை மட்டுமே காரணம் அல்ல. தசை இழப்பிற்கான காரணத்தை அறிய இன்னும் சரியான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை.

சுற்றுப்புறச் சூழ்நிலையின் பாதிப்பு, சில நோய்கள் மற்றும் ஹார்மோன் மாற்றத்தினால் இந்நோய் இருக்கலாமோ " என்று கணித்திருக்கிறார்கள். இவை * எல்லாமே நிரூபிக்கப்படவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிய அன்றைய தலைமுறையினருக்கே இந்தநிலை என்றால், இன்று செயலற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இளைஞர்களுக்கு வெகுசீக்கிரத்தில் தசையிழப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அறிகுறிகள்

தோள்பட்டைத் தசைகள் சுருங்கி, பார்ப்பதற்கு இளைத்திருப்பது போல் தோன்றும். அவற்றின் செயல்திறனும் குறைவதால், அன்றாடம் செய்யும் வேலைகளை எளிதாகச் செய்ய முடியாது. இளைால் தன்னுடைய பிவலைகளைச் செய்வதற்கு மற்றவரின் உதவியை நாட வேண்டியிருப்பதால், அடுத்தவரைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை வரும். ஆகையால் இவர்களின் உடல் தரம் வெருவாகக் குறைந்துவிடும்.

வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone), டெஸ்ட்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற சில ஹார்மோன்களின் உற்பத்தியும் குறையத் தொடங்குகின்றன. மார்புத் தசைகளும் சுருங்கத் தொடங்குவதால், இதயம் மற்றும் நுரையீரல் தசைகளும் சுருங்கி, மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். நரம்பணுக்கள் குறைவதால் மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் இயக்கம் தொடர்பான செயல்கள் தடைபடும்போது அடிக்கடி நிலை தவறிக் கீழேவிழுவார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.

நோயைக் கண்டறிதல்

தசை பலம் அறியும் பரிசோதனை, கைப்பிடிப் பரிசோதனை போன்ற பரிசோதனை முறைகள் இருக்கின்றன. ஒரு பொருளைச் சரியாக எப்படிப் பிடிக்கிறார் என்பதையெல்லாம் சோதனை செய்து  தெரிந்துகொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News